About Us

Vidwan. V.JOSEPH M.A

YESUVIN JEEVA SWARANGAL

VIDWAN. V.JOSEPH M.A

வித்வான் V. ஜோசப் MA., அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் 1929ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் பதினேழாம் வயதில் கர்த்தரை தன் சொந்த இரட்சகரராக ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றார். ஆசிரியரான இவர் தன் உலகப்பிரகாரமான வேலைகளோடு கர்த்தருடைய ஊழியத்தையும் செய்து வந்தார். பிரசங்கிப்பதிலும் பாடல்கள் இயற்றிப்  பாடுவதிலும் ஹார்மோனியம் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார். ‘தீர்க்கதரிசன விளக்கம்’ என்ற மாதாந்திர பத்திரிக்கையும் நடத்திவந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் மருமகன்களும் பேரக்குழந்தைகளும் தேவன் தாமே ஆசீர்வாதமாக கொடுத்திருக்கிறார். மகள்களும் மருமகன்களும் கல்லூரிப் பேராசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிகின்றனர். இவர் 2002ஆம் ஆண்டு தான் நேசித்த கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இவர் இயற்றிய பாடல்கள் சிலவற்றை தேவ நாம மகிமைக்கென்று அவரின் குடும்பத்தாராகிய நாங்கள் வெளியிட்டு அர்ப்பணம் செய்கிறோம்.

இசை & வீடியோ தயாரித்தவர்
Dr.J.ரவிக்குமார் ஞானசேகரன்(ஜீவா ரவி),
முதல்வர்,சீயோன் இசைப் பள்ளி, கோயம்புத்தூர்-12, தமிழ்நாடு, இந்தியா. www.zionmusicschool.com

Yesuvin Jeeva Swarangal